பாட்னா: தொடர்ந்து வாட்டும் வெயில் காரணமாக பிகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் ஒன்றான பிகாரில் கடும் வெயில் கொளுத்துகிறது. பாட்னா, கயா மற்றும் பாகல்பூர் நகரங்களில் ஞாயிறன்று 115 டிகிரி வெயிலுடன் அனல்காற்று வீசியது. பிகாரில் வாட்டும் வெயிலுக்கு இதுவரை 70 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 30 பேரும், கயா மாவட்டத்தில் 20 பேரும், நவடா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட மேலும் பலரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெயில் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து வாட்டும் வெயில் காரணமாக பிகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீடித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக பாட்னா நகரில் கடந்த 9–ந் தேதி முதல் ஞாயிறு வரை அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது வரை வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் கல்வி நிலையங்களை தொடர்ந்து மூட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


