மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த முதிய நபர் ஒருவர் இறந்து விட்டதாக இரவில் அறிவித்த அதே மருத்துவர், காலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சாகர் மாவட்டம் பினா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 72 வயது கிஷண் என்பவர் வியாழக்கிழமை இரவு மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அதே நபருக்கு காலையில் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் காலை 10.20 மணிக்கு உண்மையிலேயே உயிரிழந்துவிட்டார்.
வயதான நபர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாக வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் உயிரிழந்தவரின் விவரங்களை பதிவு செய்து கொண்டு காலையில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டவர் உயிரோடு சிகிச்சை பெற்று வந்தார். பணியில் இருந்த மருத்துவர், உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நபர் உயிரோடு இருப்பதாகக் காவல்துறையிடம் கூறி, காவலரை திருப்பி அனுப்பி விட்டார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முதியவர் வெள்ளிக்கிழமை காலை 10.20க்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இரவே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நபர், இரவு முழுவதும் சிகிச்சை கிடைக்காமல் உயிரோடுதான் இருந்துள்ளார். இது முழுக்க முழுக்க மருத்துவர்களின் கவனக் குறைவு என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


