பெங்களூரு: உங்களது அறியாமை எந்த நதியில் குளித்தாலும் போகாது என்று பிரதமர் மோடியை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஞாயிறன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுடன் பிரதமர் மோடி தனது நமோ ஆப் வழியாக உரையாடினார். அப்போது சிறுமியொருவர் டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடுடைய குழநதைகளின் நலனுக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள் பற்றிக் கேள்வி எழுப்பினார்.
அவர் தனது கேள்வியை முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட மோடி, 'இந்த திட்டமானது 40 - 50 வரையுள்ளவர்களுக்கும் பொருந்துமா? அப்படியென்றால் அத்தகைய குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்' என்று பதில் கேள்வி எழுப்பினார்.
மோடியின் இந்த பேச்சு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மனதில் கொண்டு பேசப்பட்டது என்று விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் உங்களது அறியாமை எந்த நதியில் குளித்தாலும் போகாது என்று பிரதமர் மோடியை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெயரால் பிரதமர் மோடி செய்துள்ள அரசியல் விமர்சனங்கள் கொண்ட விடியோ ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். வெட்கமாக இல்லையா உங்களுக்கு மோடி? இதைவிட நீங்கள் கீழிறங்க முடியாது. உங்களது அறியாமை எந்த நதியில் குளித்தாலும் போகாது. அந்த குழந்தைகள் கற்றலில் மெதுவாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போல இதயமற்றவர்கள் கிடையாது.
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துயருற்ற தாயின் குரல்! பிரதமர் மோடிக்கு கேத்தனின் தாய் கடிதம்!

அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்!

தெய்வ தரிசனம்... குரு தோஷம் நீங்கும் ஐயாறப்பர் கோயில் - திருவையாறு (பகுதி 2)

மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



