புது தில்லி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தில்லியில் மொத்தம் 7 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான நிலையில் இருப்பதால் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தில்லியில் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டது. காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் ஆம் ஆத்மி முதலில் முன்வந்துள்ளது.
ஆனால் காங்கிரசைச் சேர்ந்தவரான தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு ஆம் ஆத்மி கூட்டணியில் நாட்டம் இல்லை என தகவல் வெளியாகியது. இதற்கிடையே தொடர் தாமதத்தின் காரணமாக 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை மட்டும் காங்கிரசுக்கு வைத்திருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் செவ்வாயன்று சந்தித்து பேசினர். இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரும்பாலான மாநில தலைவர்களின் கருத்தை ராகுல் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்சித் பேசுகையில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியதோடு, காங்கிரஸ் ஏழு தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்பதையும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


