தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கெட்டப்பை மாத்திய நிரவ் மோடி: இப்போது லண்டனில் என்ன செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள்!

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு லண்டன் சென்று தலைமறைவான நிரவ் மோடி, லண்டனில் கெட்டப்பை மாற்றிவிட்டு வர்த்தகம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2019, 6:59 am

IANS


புது தில்லி: இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு லண்டன் சென்று தலைமறைவான நிரவ் மோடி, லண்டனில் கெட்டப்பை மாற்றிவிட்டு வர்த்தகம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் நாளிதழ் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது. அதில், லண்டனில் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் நிரவ் மோடியை, செய்தியாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பிப் பேசுகிறார்.

அந்த விடியோவில் காணப்படும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முரட்டு மீசை, தாடி என ஒரு தாதாவைப் போல சிரித்த முகத்துடன் விடியோவில் பேசுகிறார் நிரவ்.
 

செய்தியாளர் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் கூற மறுத்திருக்கும் நிரவ் மோடி நோ கமெண்ட் என பதிலளித்துள்ளார்.

இதையெல்லாம் விட, ஒரு சில லட்சம் கடன் வாங்கி கட்ட முடியாமல் சிபில் ஸ்கோரில் மாட்டிக் கொண்டிருக்கும் சாதாரண இந்திய பொது ஜனங்கள் எல்லாம் வயிற்றெரிச்சல் படும் அளவுக்கு ஒரு விஷயத்தையும் டெலிகிராப் தெரிவித்துள்ளது.

அதாவது, கடன் வாங்கி ஏமாற்றி ரெட் கார்னர் நோட்டீஸ் பெற்ற நிரவ் மோடி லண்டனில் வெஸ்ட் எண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அதோடு அங்கே ஒரு வைர வியாபாரம் செய்யும் கடையையும் அவர் துவக்கியிருப்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

விடியோ : நன்றி The Telegraph

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.