நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும்: சிவசேனை

இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும்: சிவசேனை
Updated on
1 min read


மும்பை: இலங்கையில் விதிக்கப்பட்டிருப்பதை போல, இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.

யார் ஒருவரையும் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதால், அவசர காலத்தை கவனத்தில் கொண்டு இந்தத் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது யார் ஒருவரும் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதைனுமதிக்கக் கூடாது என்றும் சிவ சேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நடந்து வரும் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com