தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரேபரேலி, அமேதி சிறந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: ராபர்ட் வதேரா

ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகள் சிறந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :6 மே 2019, 6:47 am

ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகள் சிறந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ரேபரேலி மற்றும் அமேதி தொகுதி வாக்காளர்கள் அனைவரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் இங்கிருந்து தான் சிறந்த இந்தியாவுக்கான வழி ஏற்படப்போகிறது. உண்மையான வளர்ச்சிக்காக எங்கள் குடும்பமாகிய இத்தொகுதிகளின் வாக்காளர்கள் அனைவரும் நிச்சயம் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்மறையை வீழ்த்தும் விதமாக மாற்றத்தை உருவாக்க வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரும், எனது மாமியாருமான சோனியா ஆகியோருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.