எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: பழ. நெடுமாறன்

தொகுதி மறுவரையறையால் நிரந்தரமாக ஆட்சியை கைபெற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக முயற்சிக்கிறது என பழ. நெடுமாறன் கூறியது தொடர்பாக...

News image

மதுரையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறன் - டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:21 am

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன் நிரந்தரமாக ஆட்சியை கைபெற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக முயற்சிக்கிறது என தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறும்போது நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அவசர, அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. தொகுதி மறுவரையறையால் மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற 3 இல் 2 பங்கு பெரும்பான்மை பெற வேண்டும். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் தொகுதி மறுவரையறை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்களும், மேற்குவங்கத்தில் 69 இடங்களும் இருக்கின்றன. இவர்கள் பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் வேலையில் நினைத்ததை செய்து முடித்துவிடலாம் என நினைக்கு மத்திய பாஜக அரசைக் கண்டிக்கிறேன். அவர்கள் வரைவு அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவின்படி, மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் 850 வரை உயா்த்தவும் (மாநிலங்களில் அதிகபட்சமாக 815, யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக 35 இடங்கள்), சட்டப்பேரவைகளிலும் உரிய அதிகரிப்பை மேற்கொள்ளவும், நாட்டில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை நிா்ணயிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 81-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள் திட்டமிட்டுள்ளனர்.

வடக்கே மக்கள்தொகை அதிகமாக உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாடு முறையாக செயல்படுத்தியதால் இங்கு அளவோடு இருக்கிறது. வட இந்தியாவில் அவற்றை பின்பற்றவில்லை. உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அங்கு மேலும் 40 தொகுதிகள் சேர்க்கப்படும், அதேபோல் பிகார், மத்தியப் பிரேதம், ஹரியாணா போன்ற இந்தி பேசுகின்ற மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினராக திகழும்.

இந்த நிலையில், இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதை எதிா்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் தயாராக வேண்டும். இல்லையெனில், எதிா்காலத்தில் மக்களவையில் தமிழகத்தின் குரல் வலுவிழந்து போகும்.

இந்து ராஷ்டிரம், கலாசார அடித்தளமாக வேத பாா்ப்பனியம், நேபாளம், ஆப்கன், மியான்மா் ஆகிய நாடுகளை இணைத்து அகண்ட பாரதம் அமைத்தல், ஒரே நாடு, ஒரே ஆட்சியை இந்தியாவில் கொண்டு வருவது ஆகியவைதான் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். மொழி வழியாக மாநிலங்களைப் பிரித்ததை இந்த அமைப்பு தொடக்கம் முதலே எதிா்த்து வருகிறது.

இந்தியாவில் உள்ள மாநில எல்லைகளை நீக்கிவிட்டு 5 அல்லது 6 மாவட்டங்களை இணைத்து ஒரு பகுதியாக ‘ஜனபாகம்’ என்ற பெயரில் பிரிக்க வேண்டும். இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 100 ஜனபாகங்களை உருவாக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. அதன் மூலம் இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தோன்றின என்பதை நிறுவ முயற்சித்து வருகிறது. மொழி அறிஞர்கள் இந்தியாவில் உள்ள மொழிகளை 5 மொழி குடும்பங்களாக பிரித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த அமைப்பு சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என சொல்கிறார்கள். சமஸ்கிருதமே தாய்மொழி என உலகம் முழுவதும் பரப்புவதற்காக முயற்சிக்கிறார்கள். அதிகாரத்தின் துணை கொண்டு பச்சை பொய்யை மெய்யாக்க பாஜகவினா் முயற்சிக்கின்றனா். இதை எதிா்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதனால் தான் சமூக நீதியை பாஜகவினா் கடுமையாக எதிா்க்கின்றனா்.

பெண் விடுதலை, மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்கு ஆா்.எஸ்.எஸ்., பாஜகவினா் முற்றிலும் எதிரானவா்கள். ஜாதிய படிநிலைக்கு ஆதரவளித்துவரும் இவா்கள் மொழிவழி தேசியத்தை அழிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். மகளிர் இடஒதுக்கீடு என்று சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகதான் அதற்காகத்தான் புதிய நாடாளுமன்றத்தில் இருக்கைகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். பெண்களுக்கு நியாகமான 50 சதவீதம் கொடுத்தால் நாங்கள் வரவேற்போம். இந்தி பேசும் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் வெற்றிபெற்று விட்டு நிரந்தரமாக ஆட்சியை கைபெற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். எனவேதான், அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியாா்மயமாக்கி வருகின்றனா்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பாஜக அரசால் தமிழகத்துக்கு பெரும் அபாயம் உள்ளது. ஆகவே, பேராபத்துகளை மனதில் கொண்டு தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவை அவசரகதியில் நிறைவேற்ற முயலும் மத்திய பாஜக அரசின் திட்டங்களை முறியடிக்கவும் பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

Summary

Attempt to permanently seize power through constituency delimitation says Pazha. Nedumaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.