மகாராஷ்டிராவில் ஜவுளி குடோனில் பயங்கர தீ: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 
மகாராஷ்டிராவில் ஜவுளி குடோனில் பயங்கர தீ: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
Updated on
1 min read


புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

 மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உருளி தேவாச்சி கிராமத்தில் ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. இதையடுத்து குடோனில் இருந்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

 தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்களின் போராட்டத்திற்கு பின்னர் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 5 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Maharashtra Pune: Fire broke out in a cloth godown in Uruli Devachi village in the early hours today. 4 fire tenders were rushed to the spot, fire under control now. Injured rushed to hospital. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com