பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் சனிக்கிழமை பங்கேற்கும் பிரசாரங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களவைக்கான 6-ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மேற்கு வங்கம், பிகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும், தேசியத் தலைநகர் தில்லியிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஏற்கெனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் (ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6) நடைபெற்று முடிந்த நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் சனிக்கிழமை பங்கேற்கும் பிரசாரங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் காசியாபூர் ஆகிய 2 பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிகாரில் உள்ள கைமுர், போஜ்பூர் மற்றும் பாட்னா ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல், மத்தியப்பிரதேசத்தில் உள்ள சுஜல்பூர், தர் மற்றும் கார்கோனே ஆகிய 3 இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


