குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தில்லியில் உள்ள வெங்கய்ய நாயுடுவின் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் மோடி வந்தார். பின்னர் அவருடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் வெங்கய்ய நாயுடு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி என்னை (வெங்கய்ய நாயுடு) காலையில் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டதற்கு மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். வளர்ச்சி, நாடாளுமன்ற அமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சார்பில் சுட்டுரையில் வெளியிடப்பட்ட பதிவில், "வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசினேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் சந்தித்தபோது எடுத்த 2 படங்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில், மக்களவைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதன்படி, அவருக்கு ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை மோடி சந்தித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகா யுத்தம்... தமிழில் பதிவிட்ட ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை!

குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது: கிராம ஊராட்சிகள் அதிரடி

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்






