உத்தர பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் தீபாவளியை நிஜ துப்பாக்கி வைத்து வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாரேலி இசாத் நகரை சேர்ந்தவர் அஜய் மேத்தா என்ற தொழிலதிபரே, நிஜ துப்பாக்கியில் தீபாவளி கொண்டாடியவர்.
இந்த சம்பவத்தை பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பிற்காக தங்களது வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர்.
இதுதொடர்பாக பரவி வரும் அந்த வீடியோவில், தொழிலதிபரின் மனைவி நிஜ துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி சுடுகிறார். அவருடன் அவரது குழந்தைகளும் உடன் இருக்கின்றனர். இதேபோன்ற மற்றொரு வீடியோவில், தொழிலதிபர் வானத்தை நோக்கி சுடுகிறார். மேலும், பிரபல பாலிவுட் திரைப்படமான 'சோலே' படத்தில் வரும் "Tera kya hoga Kalia" என்ற வசனத்தையும் கூறுகிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியான பிறகே போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளனர். எனினும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாங்கள் பொம்மை துப்பாக்கி தான் பயன்படுத்தியதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது அவர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ளார். அந்த துப்பாக்கிகள் உண்மையான துப்பாக்கிகள் என தெரியவந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ஆய்வாளர் கே.கே.வர்மா தெரிவித்துள்ளார்.
அந்த துப்பாக்கிகள் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கிகள் என்று தெரியவந்தாலும், அதன் லைசன்சஸ் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


