மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் சிவசேனா கட்சி தான் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், ஆட்சி அமைப்பது குறித்து பாஜக - சிவசேனாவுக்கு இடையே இழுபறி நீடித்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே இரு கட்சியும் கூட்டணியில் இருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியில் சமபங்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒத்துழைக்காததால் பாஜக - சிவசேனா இடையே இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. பாஜகவுடன் உடன்பாடு எட்டப்படாத சமயத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
இவ்வாறான குழப்பங்களுக்கு இடையே, சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் முதல்வர் போட்டியில் சிவசேனா கட்சிதான் வெற்றி பெறும். பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவி குறித்து மட்டுமே இருக்கும். மகாராஷ்டிராவில் அரசியல் மாறிக்கொண்டே இருக்கிறது. சிவசேனா காட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக வேண்டும் என்று மக்களும் விரும்புகிறார்கள். முதல்வர் பதவியில் சமபங்கு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது நீதிக்கான போராட்டம். இந்த போராட்டத்தில் சிவசேனாவுக்கே வெற்றி கிடைக்கும். சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


