தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த ராட்சத முதலை; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!(விடியோ)

குஜராத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் நள்ளிரவில் முதலை ஒன்று புகுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 நவம்பர் 2019, 10:35 am

DIN

குஜராத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் நள்ளிரவில் முதலை ஒன்று புகுந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் மகேந்திர பாதியார் என்பவர் இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பூனையாக இருக்கும் என்று அவர் எழுந்து பார்த்த போது,  குளியலறையில் முதலை ஒன்று இருந்துள்ளது. அதைபார்த்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக  வனவிலங்கு மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வந்து முதலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் முதலையை மீட்டனர். வீட்டின் குளியலறைக்குள் அவ்வளவு பெரிய முதலை எப்படி வந்தது? என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

YouTube video thumbnail

குளியலறைப் பகுதி மிகவும் இருட்டாக இருந்ததால் முதலையை பிடிக்க சற்று கடினமாக இருந்தது என்று வனவிலங்கு மீட்பு அறக்கட்டளையைச் சேர்ந்த கிருஷ்ண கயக்வாட் மற்றும் மணிஷ் பிஸ்ட் ஆகியோர் தெரிவித்தனர். வனவிலங்கு மீட்பு பணியாளர்கள் முதலையை மீட்கும் இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.