கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூட்டணிப் பேச்சுவார்த்தை என யார் கூறினார்கள்? சஞ்சய் ரௌத்தை சந்தித்த பின் ஷரத் பவார் பதில்

நெஞ்சுவலி காரணமாக சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் (57) மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

News image
Updated On :12 நவம்பர் 2019, 7:06 am

DIN

மகாராஷ்டிரத்தில் இப்போது நிலவி பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்தும், தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் சஞ்சய் ரௌத், நாள்தோறும் செய்தியாளா்களைச் சந்தித்து தகவல் தெரிவித்து வந்தாா்.

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் (57) மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ரௌத்தை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சிவசேனையுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக யார் கூறினார்கள்? அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.