சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது: ராஜ்நாத் சிங்

6-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :18 நவம்பர் 2019, 6:24 am

DIN

6-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஏடிஎம்எம்-பிளஸ் நாடுகளின் 17 பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,

2024-ஆம் ஆண்டில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை முன்னெடுக்கம் விதமாக 'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-ஆவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. 2014-18 ஆண்டுகளுக்குள்ளாக 9.5 சதவீத ஆயுத இறக்குமதி நடைபெற்றுள்ளது. 

இந்தியாவின் 2019-20 நிதியாண்டில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 60 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஏறக்குறைய 65% பாகங்கள், கூறுகள், இருக்கும் அமைப்புகளின் துணை அமைப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன, இந்தியா இப்போது அவற்றை தயாரிக்க முடியும் & தோராயமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு பொருட்கள் உள்நாட்டு தனியார் துறைகளால் தயாரிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு உற்பத்தி கொள்கை 2018 வரைவு-ன் படி 2025-ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு லட்சியமாக இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது ஊக்கமளிக்கிறது.

2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தயாரிப்பு 26 பில்லியன் அமெரிக்க டாலரை அடைவதற்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.