தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இது பாஜகவின் சதி! சிவசேனை - என்சிபி ஒற்றுமையாகவே உள்ளது: ஷரத் பவார் - உத்தவ் தாக்கரே பேட்டி

எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணையாது, நேர்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பாஜகவை ஆதரிப்பதை ஏற்க மாட்டார்கள் என்று ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

News image
ஷரத் பவார் - உத்தவ் தாக்கரே பேட்டி
Updated On :23 நவம்பர் 2019, 7:47 am

DIN


எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணையாது, நேர்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பாஜகவை ஆதரிப்பதை ஏற்க மாட்டார்கள் என்று ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் - சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே இன்று கூட்டாகப் பேட்டியளித்தனர்.

அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷரத் பவார் கூறியதாவது, அஜித் பவாரின் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார். புதிய சட்டமன்றக் குழுத் தலைவர் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்.

சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 170 எம்எல்ஏக்கள் எங்களிடம் உள்ளனர்.

எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணையாது. 10 முதல் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித் பவாருடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளனர். பாஜகவை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை உணர வேண்டும்.

உண்மையான தேசியவாத காங்கிரஸ் தொண்டர் பாஜகவை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டான். கட்சித் தாவல் தடைச் சட்டம் பயனற்றதாக உள்ளது. ஆளுநர் மாளிகைள் நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அஜித் பவார் தங்களை ஏமாற்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மூன்று பேர் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அறிவித்தவாறு மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்போம் என்று ஷரத் பவார் கூறினார்.

பாஜகவின் செயல்பாடு இப்படியே தொடர்ந்தால், இனி தேர்தல் என்ற ஒன்றே தேவைப்படாது. ஜனநயாகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள்.

மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையிலேயே சிவசேனை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.