ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிர வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
maharashtra assembly
Updated On :25 நவம்பர் 2019, 6:17 am

DIN


புது தில்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக - அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்றுக் கொண்டதை எதிர்த்து சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சீவ் கன்னா, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் பட்னவீஸுக்கு பெரும்பான்மை இருப்பது சந்தேகமே என கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், முழு பெரும்பான்மையுடன்தான் ஆட்சி அமைத்துள்ளதாக வாதிட்டார்.
 
அதற்கு பெரும்பான்மை இருக்கிறதென்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வழக்குரைஞர் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு எம்எல்ஏக்கள் பதவியேற்ற பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். அது எப்போது என்பதைத்தான் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

இதற்கு உச்ச நீதிமன்றம், 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை  நிரூபிப்பது குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.

இதற்கு நீதிபதி கூறுகையில், இதுபோன்ற வழக்குகளில் 24 அல்லது 48 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.

அவசர அவசரமாக ஆட்சியமைத்த பட்னவீஸ், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம்  கோருவதில் உள்நோக்கம் உள்ளது. 54 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறிய அஜித் பவார் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார், 54 எம்எல்ஏக்களும் தாங்கள் பாஜகவை ஆதரிப்பதாகக் கூறிய கையெழுத்திட்டுள்ளனர் என கபில் சிபல் வாதிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.