
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னிலையில் விளங்கும் காக்னிஸென்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர் பதவி முதல், நடுத்தர பதவி வரை சுமார் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து செலவுக் குறைப்பில் இறங்க உள்ளது.
மேலும் படிக்க.. 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு!
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காக்னிஸென்ட் நிறுவனம், கன்டென்ட் மாடரேஷன் பணியில் இருந்து முற்றிலும் வெளியேறவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் பணியாளர்களின் பணி வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டு லாபக் கணக்கை வெளியிட்ட காக்னிஸென்ட், செலவுகளைக் குறைத்து அந்த தொகையை வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வரும் காலாண்டில் உலக அளவில் இயங்கும் பல்வேறு கிளைகளில் இருந்து 10 - 12 ஆயிரம் உயர் பதவி முதல் நடுத்தர பணியிடங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.