ராஜஸ்தானில் கனமழையால் பள்ளிக்குள் புகுந்த வெள்ளநீர்; விடிய விடிய காத்திருந்த 400 மாணவர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, பள்ளி ஒன்றில் வெள்ளநீர் புகுந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 400 பேர் விடிய விடிய பள்ளியிலே தங்கியிருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். 
ராஜஸ்தானில் கனமழையால் பள்ளிக்குள் புகுந்த வெள்ளநீர்; விடிய விடிய காத்திருந்த 400 மாணவர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, பள்ளி ஒன்றில் வெள்ளநீர் புகுந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 400 பேர் விடிய விடிய பள்ளியிலே தங்கியிருக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்களும் நிறைந்துள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கார்க் மாவட்டத்தில் ராணா பிரதாப் ஏரியில் நீர் நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறந்து விடப்பட்டது. 

உபரி நீரால் அம்மாவட்டத்தின் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. அங்கிருந்த பள்ளி ஒன்றிலும் நீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால்  மாணாக்கர்கள் பள்ளிக்குள்ளே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் விடிய விடிய பள்ளியிலே தங்கியிருந்தனர். பள்ளிக்கு அருகில் உள்ள மக்கள், மாணவ, மாணவிகளுக்கு உணவு சமைத்து கொடுத்தனர். தொடர்ந்து, அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் இரு தினங்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் கிழக்குப் பகுதியில், அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மேலும் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com