

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்கு எண்களைக் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டு, கடைசியாக செப்டம்பர் 30-ஆம் தேதியே இதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: பான் எண்ணுடன், ஆதார் எண்ணை நீங்களே இணைப்பது எப்படி ?
இந்த கால அவகாசம் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில், தற்போது அது டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.