தகவல் தொடர்பு இல்லாதது ஒன்றும் மனித உரிமை மீறல் அல்ல: அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்பு இல்லாதது ஒன்றும் மனித உரிமை மீறல் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்பு இல்லாதது ஒன்றும் மனித உரிமை மீறல் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பு குறித்தான கருத்தரங்கம் தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 

"கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான முடிவால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் வளர்ந்த பிராந்தியமாக ஜம்மு-காஷ்மீர் திகழும். ஜம்மு-காஷ்மீரில் எங்கே கட்டுப்பாடுகள் உள்ளது? உங்களது மனதில்தான் கட்டுப்பாடுகள் உள்ளது. அங்கு கட்டுப்பாடுகளே கிடையாது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. 

காஷ்மீரில் மொத்தமுள்ள 196 காவல் நிலையங்களில், அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. வெறும் 8 காவல் நிலையங்களில் மட்டுமே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உலக தலைவர்களும் நியூயார்கில் 7 நாட்கள் ஒன்று கூடியிருந்தனர். அதில் ஒரு தலைவர்கூட ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுக்கவில்லை. இது பிரதமரின் மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி.

கடந்த பல வருடங்களாக, ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 41,800 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், யாரும் ராணுவ வீரர்கள், விதவை மனைவிகள் அல்ல பெற்றோர்களை இழந்த குழந்தைகள் ஆகியோருக்கான மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால், சில நாட்களுக்கு மொபைல் போன் இணைப்புகள் இல்லாதது குறித்து பிரச்னை கிளப்ப முயற்சிக்கின்றனர். தகவல் தொடர்பு இல்லாதது ஒன்றும் மனித உரிமை மீறல் அல்ல.

கடந்த 2 மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் 10,000 புதிய தரைவழி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், 6000 பொது தொலைபேசி நிலையங்களும் அங்கு உருவாகியுள்ளது.   

சட்டப்பிரிவு 370 மீது எடுக்கப்பட்ட முடிவு இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்தும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com