மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிப் பேசிய டென்னிஸ் வீரர் யார்? ஏன் தெரியுமா?

மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிப் பேசிய டென்னிஸ் வீரர் யார்? ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாதந்தோறும் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாதந்தோறும் மன் கீ பாத் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே நேரடியாக உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கீ பாத்-தில் (மனதின் குரல்) ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.

அப்போது ரஷியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மெத்வதேவ் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.

மோடி பேசிய உரையில், இதேபோல், அண்மையில் ரஷிய டென்னிஸ் வீரரின் பேச்சு என் இதயத்தைத் தொட்டது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடாலிடம் ரஷியாவின் இளம் வீரரான டேனில் மெத்வதேவ் தோல்வியடைந்தார். எனினும், ஆட்டம் முடிந்த பின் மெத்வதேவ் ஆற்றிய உரை அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தது. அது அவரது முதிர்ச்சியையும் பணிவையும் வெளிப்படுத்தியது. 

அதேபோல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு டென்னிஸ் விளையாட்டில் ஊக்கமளிக்கும் சக்தியாக ரஃபேல் நடால் திகழ்கிறார். அவர், ரஷிய வீரர் மெத்வதேவைப் புகழ்ந்தார். இந்த இருவரின் பேச்சையும் மக்கள் விடியோவில் பார்க்க வேண்டும் என்றார் மோடி.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நாடலிடம் 23 வயதே ஆன மெத்வதேவ் 5-7, 3-6, 7-5, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றார்.

போட்டிக்குப் பிறகு மெத்வதேவ் பேசுகையில், இந்த இரவை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கவே மாட்டேன். ரஃபேல் நடாலின் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் நிச்சயம் மறக்க முடியாது. அவரும் நிச்சயம் அவரது முதல் இறுதிப் போட்டியை மறக்க மாட்டார் என்று நினைக்கிறேன், அவர் வென்றிருந்தாலும், நான் தோற்றிருந்தாலும் கூட இது மிகச் சிறப்பானதொரு போட்டியாக இருந்தது. இது மிகச் சிறந்த கதை. இந்த பருவக் காலம் முழுக்கவே எனக்கு அருமையாக அமைந்துள்ளது. நான் 70 வயது ஆனாலும் கூட இந்த நிகழ்வை நிச்சயம் மறக்க மாட்டேன் என்று பேசினார்.

ஒரு வீரர் எப்போதுமே, எதிர்த்து போட்டியிடும் வீரரின் பெருமையைப் பேச மாட்டார்கள். ஆனால், மெத்வதேவ் நடாலின் சிறப்புகளை அழகாகக் குறிப்பிட்டுப் பேசினார். அதுமட்டுல்ல, நாடலைக் குறிப்பிட்டு எதிர்த்துப் போட்டியிட்டு விளையாடுவது மிகக் கடினம் என்றும் மெத்வதேவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com