தேசத்தை உடைக்கும் தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் குறித்து ஜேட்லி சாடல் 

தேசத்தை உடைக்கும் தேர்தல் அறிக்கை என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேசத்தை உடைக்கும் தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் குறித்து ஜேட்லி சாடல் 

புது தில்லி: தேசத்தை உடைக்கும் தேர்தல் அறிக்கை என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரசின் தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் செவ்வாயன்று வெளியிட்டார்.

இந்நிலையில் தேசத்தை உடைக்கும் தேர்தல் அறிக்கை என்று காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சில திட்டங்கள் தேசத்தை உடைப்பதாகும். பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் அது ஒரு குற்றமாகாது என்று கூறும் ஒரு கட்சி ஒரு வாக்குக்குக் கூட தகுதியற்றது.

ராஜீவ் காந்தி தடா சட்டத்தைக் கொண்டு வந்தார், பின் நரசிம்மராவ் அதனை நீக்கினார். மன்மோகன் சிங் பொடாவைத் தள்ளுபடி செய்தார்.  காங்கிரஸ் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் கிளர்ச்சியாளர்களும், பயங்கரவாதமும் மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறாக காங்கிரசின் திட்டங்கள் அபாயகரமானதாகவும், நடைமுறை சாத்தியம் இல்லாததாகவும் உள்ளது, அவர்களின் வாக்குறுதிகள், மாவோயிஸ்ட்களையும் ஜிஹாதிகளையும் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. .

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com