சுடச்சுட

  

  மோடி ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல: ராகுல் ஆவேசம்

  By DIN  |   Published on : 11th April 2019 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul

   

  நரேந்திர மோடி ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர் கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆவேசமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, ரே பரேலி தொகுதியில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனிருந்தார். இந்நிலையில், அவர் பேசியதாவது:

  கடந்த காலங்களில் பலர் தங்களை சர்வ வல்லமை படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், வரலாறு வேறு மாதிரியாக அமைந்தது. அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் தன்னை சர்வ வல்லமை படைத்தவராக கருதுகிறார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடந்தவுடன் அதன் உண்மை நிலை தெரிந்துவிடும். 

  காங்கிரஸ் மீது தேவையற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை மோடி முன்வைக்கிறார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுத்தாலும், என்னை கைது செய்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் எழுப்பிய அந்த 4 கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கச் சொல்லுங்கள். 

  ஒருவேளை என்னுடன் விவாதிக்க தயார் என்றால், மோடியால் எனது கண்களை கூட பார்க்க முடியாது. ரஃபேல் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்கிறது என்பதையாவது பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai