சுடச்சுட

  
  rain_and_storms_1

   

  மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் செவ்வாய்கிழமை பெய்த புயல் மழை காரணமாக 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

  நாடு முழுவதும் கோடை காலத்தை முன்னிட்டு கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. தினமும் வெயிலின் தாக்கமும் அதிகரித்தது.

  இந்நிலையில், மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த இரு தினங்களாக கடும் புயல் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  இந்த திடீர் புயல் மழை பாதிப்பு காரணமாக மத்தியப்பிரதேசத்தில் 16 பேரும், ராஜஸ்தானில் 6 பேரும், குஜராத் மாநிலத்தில் 11 பேர் என மொத்தம் 33 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai