

புதுதில்லி: காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் இன்று தனது டிவிட்டர் பக்க பதிவில், பல விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டில் என்னால் நான் உடன்படவில்லை. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம். காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளை பாகிஸ்தான் தூண்டி விடுவதுடன், வன்முறையில் ஈடுபடுவோரை ஆதரிக்கிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முக்கிய நாடாக இருக்கும் பாகிஸ்தான், காஷ்மீரிலும் வன்முறையை ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பயங்கரவாதத்தை மோடி அரசு ஊக்குவிக்கிறது என ராகுல் தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.