பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் 

தங்குமிட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் 

புது தில்லி: தங்குமிட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி, டிசம்பர் 31, 2005 க்கு முன் 3 தலைமுறைகளாக வனப் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு அந்த நிலங்களுக்கான உரிமையை வழங்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து வன ஆர்வலர்கள் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தரப்பில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலங்களுக்கு பட்டா நிராகரிக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த சட்டம் வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.   

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரது அமர்வு முன் கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மொத்தம் 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் பட்டா நிராகரிக்கப்பட்டுள்ளதாக 17 மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.

இதையடுத்து, பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களை ஜூலை 12-ஆம் தேதிக்குள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு செயற்கைக்கோள் படத்தை தாக்கல் செய்யுமாறு இந்திய வனத்துறை ஆய்வு மையத்தை அறிவறுத்தியுள்ளது.  இதனால், பட்டா நிராகரிக்கப்பட்ட 11,72,931 பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் வழக்கு விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்குமிட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகளை காடுகளில் இருந்து வெளியேற்றும் தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கு வியாழன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களை பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் பட்டா நிராகரிக்கப்பட்ட போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து விரிவான மனு தாக்கல் செய்யுமாறு தெரிவித்தனர்.

மாநிலங்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குறித்தான தகவல்கள் இருப்பதால் பட்டாக்கள் அனுமதிப்பு / நிராகரிப்பு தொடர்பாக மாதிரி மனுக்களை மட்டும் தாக்கல் செய்ய அனுமதி வேண்டினர்.ஆனால் அதை நிராகரித்த நீதிமன்றம் ஒவ்வொரு விண்ணப்பம் தொடர்பாகவும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது.

அதேபோல இது தொடர்பான நடைமுறைகள் எதுவும் வன பாதுகாப்புச் சட்டத்தில் இல்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா தெரிவித்த போது, நீதிபதி நவீன் சின்ஹா அவருக்கு உரிய விளக்கமளித்தார்.  

முறையான அனுமதி இல்லாமல் தங்கியிருப்பவர்கள்  கண்டிப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதேசமயம் வலிமையுள்ளவர்கள் வன நிலங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

முதலில் அமைதியாக இருந்து விட்டு பின்னர் தற்போது விழித்துக் கொண்டு பழங்குடியினர்கள் மற்றும் ஆதிவாசிகள் உரிமை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசை கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த 13-ஆம தேதி வெளியிடப்பட்ட தனது உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com