வீடியோகான் தலைமையகம் உள்பட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சாருடைய கடன் சலுகை புகாரின் பேரில் வீடியோகான் தலைமையகம், அலுவலகங்கள் உள்பட 4 இடங்களில்
வீடியோகான் தலைமையகம் உள்பட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை


மும்பை: வீடியோகான் தலைமையகம், அலுவலகங்கள் உள்பட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சாருடைய கடன் சலுகை புகாரின் பேரில் வீடியோகான் தலைமையகம், அலுவலகங்கள் உள்பட 4 இடங்களில் இன்று வியாழக்கிழமை (ஜன.24) காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

2009-ஆம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ வங்கிக்கு தலைமை செயலதிகாரியாக பணியாற்றி வந்த சந்தா கோச்சார், தமது கணவர் தீபக் கோச்சாரின் நுபவர் நிறுவனத்தில் முதலீடு செய்த வீடியோகான் நிறுவனத்துக்கு 2012 ஆம் ஆண்டு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதில் சலுகைகள் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

குற்றச்சாட்டின் முதற்கட்ட விசாரணையில் கடன் வழங்கியதில் சலுகைககள் காட்டியதற்கான முகாந்திரம் இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் சந்தா கோச்சார் ஐசிஐசிஐ தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே மும்பையில் வீடியோகான் தலைமையகம் மற்றும் மஹாராஷ்டிராவில் சந்தா கோச்சாரின் கணவர் தொடர்பான 4 அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சண்டா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் மற்றும் விடியோ கான் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com