பாஜக-வை 'பதறவைக்க' 52 எம்.பி.க்களே போதும்: ராகுல் திட்டவட்டம்

பாஜக-வை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 52 எம்.பி.க்களே போதுமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.
பாஜக-வை 'பதறவைக்க' 52 எம்.பி.க்களே போதும்: ராகுல் திட்டவட்டம்

பாஜக-வை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 52 எம்.பி.க்களே போதுமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார். இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாஜக-வை பதறவைக்க இவர்களே போதுமானவர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் நாட்டின் ஜனநாயகத்துக்காக போராடுகிறோம் என்பதை ஒவ்வொரு காங்கிரஸாரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பாஜக நிச்சயம் நம் மீது வெறுப்பு அரசியலை முன்வைக்கும். அதை நாமும் கடுமையாகவும், முழுமையாகவும் எதிர்க்க தயாராக இருக்க வேண்டும். நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது என்று தெரிவித்தார்.

பின்னர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவுக்கு வாழ்த்துகள். உங்களது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் வலிமையுடனும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் எதிர்கட்சியாக விளங்கும். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடும் என்று தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com