ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு 

ஜப்பானில் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு 

புது தில்லி: ஜப்பானில் வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

ஜப்பானின் பியூகோக நகரில் வரும் 8ஆம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் சர்வதேச பொருளாதாரத்தில் உருவாகியுள்ள சவால்கள், உட்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சர்வதேச வரிவிதிப்பு குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com