விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு உ.பியில் முன்னேறுகிறதா பாஜக?: கருத்துக்கணிப்பு வெளியீடு 

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீதான விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு உ.பியில் பாஜக செல்வாக்கு அதிகரித்திருப்பதாக செவ்வாயன்று வெளியான ஓர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு உ.பியில் முன்னேறுகிறதா பாஜக?: கருத்துக்கணிப்பு வெளியீடு 

லக்னௌ பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீதான விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு உ.பியில் பாஜக செல்வாக்கு அதிகரித்திருப்பதாக செவ்வாயன்று வெளியான ஓர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்துள்ள ஜெஇ எம் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து தான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீதான விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு உ.பியில் பாஜக செல்வாக்கு அதிகரித்திருப்பதாக செவ்வாயன்று வெளியான ஓர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நிறுவனம் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 34 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். பாஜக மட்டுமின்றி காங்கிரசுக்கும் தற்போது உத்தரபிரதேசத்தில்  ஆதரவு அதிகரித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும், சமாஜ்வாதி 18 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், இவர்களது கூட்டணியில் உள்ள அஜித் சிங்கின் கட்சி மற்றும் அப்னா தளம் கட்சிகள் தலா ஓரிடங்களில் வெற்றி பெறும். அதேசமயம் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

விமானப்படைத் தாக்குதலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணி 29 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com