சுடச்சுட

  

  'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்திக்கு அழைப்பாணை  

  By DIN  |   Published on : 02nd May 2019 08:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul Gandhi

   

  சூரத்: 'எல்லா மோடிகளும் திருடர்கள்' என்ற சர்ச்சைப் பேச்சின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

  கடந்த மாதம் 13-ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,   'ஏன் மோடி என்று பெயர் கொண்டவர்கள் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்?' என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

  இந்நிலையில் சர்ச்சைப் பேச்சின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

  சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏவான புர்னேஷ் மோடி என்பவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  அவர் தனது புகாரில் தனது பேச்சின் மூலமாக ஒட்டுமொத்தமாக மோடி இனத்தையே ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

  அந்த புகாரின் பேரில் சூரத் தலைமை ஜூடிசியல் நீதிபதி கபாடியா, நீதிமன்றத்தில் ஜூன் 7-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai