சுடச்சுட

  

  கே.சி.வேணுகோபால் ஒரு கோமாளி, கர்நாடக கூட்டணி உடைய சித்தராமையா தான் காரணம்: காங்கிரஸ் மூத்த தலைவர் பகீர் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 21st May 2019 03:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Roshan_2WPREfc

   

  கர்நாடகத்தில் கூட்டணி உடைய சித்தராமையா தான் முக்கிய காரணம் என்று அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

  காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி விரிசல் அதிகரித்து வருகிறது. விரைவில் கர்நாடக முதல்வராக இருப்பதாக சித்தராமையா கூறி வருகிறார். இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரோஷன் பெய்க் கூறுகையில்,

  எனது தலைவர் ராகுலுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஏனென்றால் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் ஒரு கோமாளி, சித்தராமையா திமிர்பிடித்தவர். இவர்களைப் போன்றவர்களால் ஏற்படும் முடிவுகள் இதுபோன்று மோசமானதாக தான் இருக்கும்.

  இந்த அரசின் அமைச்சரவை விற்கப்பட்டது. இதற்காக நான் குமாரசாமியை எப்படி குறை கூற முடியும். கர்நாடக மாநில அமைச்சரவையை அமைத்ததில் குமாரசாமிக்கு எந்த பங்களிப்பும் இல்லை. தேர்தல் முடிவுகள் வந்த முதல் நாளில் இருந்தே நான் தான் கர்நாடக முதல்வர் என்று சித்தராமையா கூறி வருகிறார். 

  ஆட்சியமைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தான் குமாரசாமி வீட்டுக்கதவை தட்டியது. இந்த தவறுகள் அனைத்துக்கும் சித்தராமையா தான் முக்கிய காரணம். அதிலும் கர்நாடக அமைச்சரவையில் கிறிஸ்தவர்களுக்கு எந்த அமைச்சர் பதவியும் வழங்கவில்லை. முஸ்லிமுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  இதில் நாங்கள் பயன்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai