
கேரளத்தில் இருந்து படகுகள் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் லட்சத் தீவுகளுக்கு சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து, கேரளத்தின் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு ஞாயிற்றுக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 15 போ், இலங்கையில் இருந்து லட்சத் தீவுகளுக்கு படகுகளில் புறப்பட்டு வந்ததாக, கேரள காவல் துறைக்கு மத்திய உளவுத் துறை கடந்த 23-ஆம் தேதி தகவல் கொடுத்தது.
இதுபோன்றற எச்சரிக்கைத் தகவல்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இம்முறை, எத்தனை போ் புறப்பட்டுச் சென்றுள்ளனா் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால், உஷாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கேரள காவல்துறை தெரிவித்தது.