
புனே: மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் சேவல் ஒன்றின் மீது ஒரு விநோத புகாரை காவல்துறையில் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ளது சோம்வார் பேட்டை பகுதி. இங்கு வசித்து வரும் பெண் ஒருவர் சமீபத்தில் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவுகிறது. இதனால் எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி சோம்வார் பேட்டை பகுதி போலீசார் கூறியதாவது:
அந்த இளம்பெண்ணின் புகாரைப் பெற்று கொண்டோம். இதுகுறித்து விசாரித்தபோது, அந்த பெண் அவரது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான் அங்கு வந்த அந்த அந்தப் பெண் புகார் கொடுத்து விட்டு சென்று உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது
அதனைத் தொடர்ந்து இங்குள்ள பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் எனது சகோதரி சற்று மனநிலை பாதித்தவள் என கூறி விட்டார். எனவே இந்த விவகாரத்தில் முறைப்படி புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G