சுடச்சுட

  

  இந்தியாவின் ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கான பின்னி மரணம் 

  By DIN  |   Published on : 30th May 2019 04:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  binny

   

  புவனேஷ்வர்: இந்தியாவில் இருந்த ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கான பின்னி முதுமை காரணமாக புதனன்று மரணமடைந்தது.

  இந்தியாவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே 'உராங்குட்டான்' வகைக் குரங்கின் பெயர் பின்னி ஆகும். முதலில் புனே மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி உயிரியல் பூங்காவில் இது வைக்கப்பட்டிருந்தது.

  பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு பின்னி ஒடிசா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது சமீபத்தில் 40 வயதை தாண்டிய நிலையில் பின்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த உராங்குட்டான் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  கடந்த மூன்று நாட்களாக பின்னியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், புதன் அன்று அது உயிரிழந்துள்ளது. அழிந்து வரும் உயி ரினமான உராங்குட்டான்கள் பொதுவாக 45 வயது வரை உயிர்வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai