பாஜக மீது கொந்தளிப்பது, தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் எதிரானது: முரளிதர ராவ்

திமுக தலைவர்கள் பாஜக மீது கொந்தளிப்பது, தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
முரளிதர ராவ் (கோப்புப்படம்)
முரளிதர ராவ் (கோப்புப்படம்)


திமுக தலைவர்கள் பாஜக மீது கொந்தளிப்பது, தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் திருவள்ளுவரை வைத்து அரசியல் சண்டை அரங்கேறி வருகிறது. திருவள்ளுவருக்கு, தமிழக பாஜக காவி நிற உடை, பட்டை மற்றும் ருத்ராட்சம் உள்ளிட்டவற்றை அணிவித்தமைக்கு திமுக கண்டனம் தெரிவித்தது. மேலும், திருவள்ளுவரை அவமதித்த பாஜக எனும் ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் தேசிய அளவில் நேற்று டிரெண்டானது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், சனாதன ஹிந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையிலேயே வள்ளுவம் வடிவமைக்கப்பட்டுள்ளது என பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா டிவீட் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று தஞ்சையில் திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் சாணி வீசி அவமதித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள டிவீட்களில்,

"திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல. அவர் ஒரு துறவி. அவர் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொருந்தும் வகையிலான உலகளாவிய விழுமியங்களுக்காகவே வாழ்ந்தார். அவரை குறுகிய வட்டத்துக்குள் அடைப்பதை மு.க. ஸ்டாலின் தவிர்க்க வேண்டும். ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு திமுக எப்போதுமே துரோகம்தான் இழைத்துள்ளது. 

திமுக தலைவர்கள் பாஜக மீது கொந்தளிப்பது, தமிழுக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் எதிரானது. நெற்றியில் விபூதி வைப்பது தமிழுக்கு எதிரானது என கூறுமாறு ஸ்டாலினுக்கு சவால் விடுக்கிறேன். விபூதியை நெற்றியில் வைப்பது தமிழுக்கு எதிரானது என்று கூற ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், தமிழர்கள் நிச்சயம் அவரை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com