உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முக்கிய இடம்பிடித்த தொல்லியல் துறை ஆய்வுகள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
The Babri Masjid was not built in empty place
The Babri Masjid was not built in empty place
Published on
Updated on
1 min read

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பாபர் மசூதி குறித்து கூறப்பட்ட முக்கிய விஷயங்கள் என்னவென்றால், அயோத்தியில் காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பதே.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முக்கிய இடம்பிடித்த தொல்லியல் துறை ஆய்வுகள்
உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் முக்கிய இடம்வகித்தன. 

அதாவது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழாய்வு செய்த போது கோயில் தூண்கள்  போன்ற அமைப்பு காணப்பட்டதாகக் கூறியது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தூண்கள்தான் கண்டெடுக்கப்பட்டன. அதில் எந்த தெய்வச் சிலைகளும் காணப்படவில்லை. தூண்களில் தாமரை மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறது. எனவே, அது இந்துக்களுக்கானது என்று கூறிவிட முடியாது என்றும் கூறியிருந்தார்கள்.

வாதங்களின் போது நீதிபதிகள் தொல்லியல் துறையின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. அதே சமயம், சில குறிப்பிட்ட விஷயங்களில் அடிப்படையை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அதுவே தீர்ப்பின் அடிப்படையாக அமைந்துவிட்டிருக்கிறது.

அதாவது, காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 

இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன. அதனை நிராகரிக்க வாய்ப்பில்லை.

பாபர் மசூதிக்குக் கீழே இருந்த கட்டடம் இஸ்லாமிய அமைப்பின் படி இல்லை. இஸ்லாமிய கட்டடமாகவும் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விஷயம்தான் தீர்ப்பின் அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்ட சில முக்கிய அம்சங்கள்..
நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.

வெறும் கட்டுமானம் இருக்கிறது என்பதற்காக மட்டும் அந்த இடத்தை சொந்தம் கொண்டாட முடியாது. பாபர் மசூதி பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

அதே சமயம், ஆங்கிலேயேர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது.

1857ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள் பகுதியில் வழிபட தடையில்லை. 1857ல்தான் கட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com