இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம்!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம்!

வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் வன்முறைக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குவகாத்தி : வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் வன்முறைக்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 4 லட்சம் குழந்தைகளின் நிலை மிகவும் அபாயகரமான இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்ற தலைப்பில் ஐ.நா.வின் குழந்தை உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 4,857 குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 30,123 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 1,638 வழக்குகள் பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் 1,127 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 179 ஆக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com