சுடச்சுட

  

  ராகுல் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா தாக்கு 

  By DIN  |   Published on : 01st September 2019 06:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amith sha

   

  தாதர்-நகர் ஹாவேலி ராகுல் காந்தியின் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

  யூனியன் பிரதேசமான தாதர் மற்றும் நகர் ஹாவேலியில் உள்ள சில்வாஸா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, ஞாயிறன்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா சென்றிருந்தார்.

  அங்கே பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்த பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ பிரதமர் மோடி அரசு நீக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதனை எதிர்த்து வருகிறது.

  இதுதொடர்பாக ராகுல் காந்தி என்ன பேசினாலும் அதை பாகிஸ்தான் புகழ்ந்கிறது. ஐ.நா.வில் பாகிஸ்தான் அளித்த கடிதத்தில் கூட ராகுல் காந்தியின் பேச்சுதான் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சிதான் வெட்கப்பட வேண்டும்.

  அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு  370 ஐ திரும்பப் பெற்ற துணிச்சலான முடிவை பிரதமர் மோடியைத் தவிர வேறுயாரும் செய்ய முடியாது. கடந்த 70 ஆண்டுகளில் பலர் நாட்டின் தலைவர்களாக வந்துள்ளார்கள். ஆனால் யாருமே அதை நீக்க முடியவில்லை. இந்த ஒரு  விஷயத்துக்காக பிரதமர் மோடியை மக்கள் ஆசிர்வதிக்கிறார்கள்

  அந்தப் பிரிவு நீக்கப்பட்ட நாளில் இருந்து, ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது இதுவரை ஒரு துப்பாக்கி குண்டு கூட பாயவில்லை. ஆனாஉலகத்துக்கும், நாட்டுக்கும் சொல்கிறேன், காஷ்மீர் முழுமையாக அமைதியாக இருக்கிறது. இதுவரை அங்கு ஒருவர் கூட பலியாகவில்லை.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai