ராஜஸ்தான் ஆளுநராக கல்யாண் சிங்கின் புதிய சாதனை!

முந்தைய ராஜஸ்தான் மாநில ஆளுநர்  கல்யாண் சிங் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த அம்மாநிலத்தின் நான்காவது ஆளுநர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். 
ராஜஸ்தான் ஆளுநராக கல்யாண் சிங்கின் புதிய சாதனை!

1967ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ந்து ஐந்தாண்டு காலம் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த ராஜஸ்தான் மாநில ஆளுநர் என்று பெருமையை கல்யாண் சிங் பெற்றுள்ளார். 

சுதந்திரம் பெற்றது முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று ஆளுநர்கள் மட்டுமே தங்கள் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். 1949 -1956 காலக் கட்டத்தில் ராஜ் பிரமுக் சவாய் மான்சிங், 1956 - 1962 காலக் கட்டத்தில் குருமுக் நிஹால் சிங் மற்றும் 1962 -67 வரை சாம்பூர்ணானந்த் ஆகிய மூவரும் தங்களது ஐந்தாண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தனர்.

1967ம் ஆண்டுக்கு பிறகு அம்மாநிலத்தில் இதுவரை 40 ஆளுநர்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யாருமே 5 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சி மாற்றம் காரணமாக ராஜினாமா, பணியிட மாற்றம், பதவியில் இருக்கும் போது இறப்பு உள்ளிட்டவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன. 

இதனால், ராஜஸ்தான் ஆளுநர்கள் தங்களது பதவிக்காலத்தை முடிக்க முடியாது என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வந்த நிலையில், 52 ஆண்டுகளுக்குப் பிறகு, கல்யாண் சிங் 5 ஆண்டுகளாக பதவியில் இருந்து சாதனை படைத்துள்ள்ளார். 

மேலும், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த அம்மாநிலத்தின் நான்காவது ஆளுநர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். 

ராஜஸ்தானின் மாநிலத்தின் புதிய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ராவை நியமித்து நேற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com