மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: இறுதி செய்யப்பட்டது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தொடர்பான தொகுதி உடன்பாடு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே இன்று (திங்கள்கிழமை) இறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது. தொகுதிப் பங்கீட்டின்படி, மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 இடங்களில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 38 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜக மற்றும் சிவ சேனா கட்சியில் இணைந்துள்ளனர். இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, 2014-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால், 15 வருட கூட்டணியை தேசியவாத காங்கிரஸ் அப்போது முறித்துக்கொண்டது. இந்தத் தேர்தலில் 122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com