ஜார்க்கண்ட் ரயில் நிலையத்தில் அல்கொய்தா தீவிரவாதி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி ஒருவர்  ஜார்கண்ட் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படையால் கைது செய்யப்பட்டுள்ளார். 
கோபுப் படம்
கோபுப் படம்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி ஒருவர்  ஜார்கண்ட் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் படையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது டாடா நகர் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காளிமுதீன் என்ற இந்த நபர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தேடப்படும் ஒரு நபர் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து பாகிஸ்தானுக்கு தீவிரவாத பயிற்சிக்காக அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் எம்.எல்.மீனா இது தொடர்பாக பேசுகையில்,  'ஜாம்ஜெட்பூரில் வசித்து வந்த இவர், கடந்த 3 வருடங்களாக  தலைமறைவாக இருந்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் உள்ளன. முன்னதாக,  அவரது கூட்டாளிகளான மொஹமட் அப்துல் ரஹம், அப்துல் சமி அலைஸ் ஹசன் ஆகியோர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இளைஞர்களைச் சேர்ப்பதற்காக காளிமுதீன் உத்தரப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் வழியாக மற்ற மாநிலங்களில் பயணம் செய்து வருகிறார். அவர் பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, சவுதி அரபு மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com