பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கேரளத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை ஏற்பாடு செய்த 23 பேர் கைது

கேரளத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை ஏற்பாடு செய்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2020, 4:43 pm

கொச்சி: கேரளத்தில் வெள்ளிகிழமை தொழுகை ஏற்பாடு செய்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2657 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 72 பேர் பலியாகியுள்ளனர்.

 மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை ஏற்பாடு செய்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எரட்டுபேட்டா பகுதியில் உள்ள தன்மையா பள்ளியில் வெள்ளிகிழமை தொழுகை ஏற்பாடு செய்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

அதேபோல் கொச்சி மாவட்டதில் உள்ள கக்கட்டுப்பாரா பகுதியில்  இருக்கும் புனித மேரி தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை ஏற்பாடு செய்ததாக தேவாலயத்தின் பாதிரியார் வர்கீஸ் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.