கர்நாடகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் பலியானார்.


கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் பலியானார்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வரும் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் பாகல்கோட் பகுதியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். இத்துடன் இங்கு பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் அந்த வைரஸால் இதுவரை 2,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் 68 பேர் பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...