சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

ராஜஸ்தானில் கரோனாவுக்கு 60 வயது மூதாட்டி பலி

ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு காரணமாக 60 வயது மூதாட்டி ஒருவர் பலியானார். 

News image
Updated On :4 ஏப்ரல் 2020, 9:24 am

DIN

ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு காரணமாக 60 வயது மூதாட்டி ஒருவர் பலியானார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 601 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்துடன் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கரோனாவுக்கு 68 பேர் பலியான நிலையில், 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் 60 வயது மூதாட்டி ஒருவர் கரோனாவால் இன்று பலியாகியுள்ளார். அம்மாநிலத்தில் கரோனா தொற்றால் நிகழ்ந்த முதல் பலி இதுவாகும். மேலும் ராஜஸ்தானில் 17 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 196 பேரில் 41 பேர் தில்லியில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தகக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.