பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனாவை வெல்வதற்காக தலையை மொட்டை அடித்துக் கொண்ட 68 காவலர்கள்

கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

News image

கரோனாவிற்கு எதிரான போர்

Updated On :6 ஏப்ரல் 2020, 10:29 am

ஆக்ரா: கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனாவை வெல்வதற்காக 68 காவலர்கள் தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 68 காவலர்கள்தான் இவ்வாறு கரோனவிற்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியேற்று தங்களது தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர்.    

மொட்டை அடித்துக் கொண்ட காவலர்கள் பதேபூர் சிக்ரி நகர வீதிகளில் அணிவகுப்பில் சென்ற விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது .

கரோனாவிற்கு எதிராக இறுதி வரை உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்ததாக நிலைய காவல் அதிகாரி புபேந்திர பலியான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.