நிலைமையைப் பொருத்து ஊரடங்கு நீடிப்பு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
நிலைமையைப் பொருத்து ஜார்க்கண்டில் ஊரடங்கு நீடிப்பு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.


நிலைமையைப் பொறுத்து ஜார்க்கண்டில் ஊரடங்கு நீடிப்பு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றானது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 6,412 பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 678 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவம், 33 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஹேமந்த் சோரன், நிலைமையைப் பொருத்து ஜார்க்கண்டில் ஊரடங்கு நீடிப்பு செய்யப்படும்.
ஜார்க்கண்டிலிருந்து ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார். ஜார்க்கண்டில் இதுவரை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக, கடந்த மாதம் 24-ஆம் தேதி பிரதமா் மோடி தேசிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டாா்.
இதன்படி 21 நாள்கள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாபிலும் இன்று ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...