பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஏப்ரல் 2020, 5:39 am

DIN

மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, தமிழர்கள் அதிகளவு வசிக்கும் மும்பை தாராவியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு இன்று மட்டும் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அங்கு கரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் அப்பகுதியில் கரோனாவுக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 1985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் பலியாகியுள்ளனர். தாராவியில் வசிக்கும் 7.5 லட்சம் மக்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.